அபரிமிதமாக அதிகரிக்கப் போகும் ஏற்றுமதி - முக்கியமான மூன்று பொருள்கள்

மத்திய அரசு மாநில அரசு மற்றும் சில முக்கியமான தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்திய ஏற்றுமதியை பெருமளவில் உயர்த்த போகின்றன என்ற செய்தி சில நாட்களுக்கு முன்பு வந்தது.

அந்த செய்தியின் சாராம்சம் என்னவெனில் இந்திய அளவில் சுமார் 10 விவசாய பொருட்களை தேர்ந்தெடுத்து அவற்றை மதிப்புக்கூட்டி அவற்றை ஏற்றுமதி செய்து பெரும் அளவில் அன்னியச் செலாவணியை கொண்டுவருவதுதான்.


  அந்தப் பத்து பொருட்களின் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை ஆனால் அந்த பத்து பொருட்களில் மூன்று பொருள்களின் பட்டியலில் என்ன என்று இப்போது தெரிந்துள்ளது.

முதலில் கோதுமை எல்.

இரண்டாவது காய்கறிகள் மூன்றாவது பழங்கள்.

கோதுமை பயிரிடுவதில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது இப்படி உலக அளவில் இரண்டாவது இடத்தில் கோதுமை உற்பத்தியில் இருந்தாலும் ஏற்றுமதியில் 34 வது இடத்தில் உள்ளது இது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு விஷயமாகும்

இதேபோல காய்கறிகள் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் ஏற்றுமதியில் 14வது இடத்தில் இருக்கிறது.

பழங்களை பொறுத்தவரை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் ஏற்றுமதியில் இருபத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது.

இப்படி மிகப்பெரிய அளவில் நாம் பொருட்களை பயிரிட்டாலும் ஏற்றுமதியில் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்பது நமக்குத் தெரிய வந்திருக்கிறது.

அதேநேரத்தில் இம்மூன்று பொருட்கள் உட்பட பல்வேறு விவசாயப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்று பார்த்தோமானால் 2019 ஏப்ரலில் இருந்து ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்திய விவசாய பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு இந்திய ரூபாயில் 20 ஆயிரத்து 700 கோடி ரூபாய்.

அதே காலகட்டத்தில் 2020, நோய்தொற்று தீவிரமாக இருக்கும் அந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் இந்திய விவசாய பொருட்களின் ஏற்றுமதியில் மதிப்பு 25 ஆயிரத்து 500 கோடி ரூபாய்.

கிட்டத்தட்ட 23 சதவீத அளவிற்கு ஏற்றுமதி வளர்ச்சி இந்த காலகட்டத்திலும் நடந்துள்ளது என்பதையும் ஆராய்ந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற பொருட்களுக்கான அதாவது கோதுமை பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி அதிக அளவில் அதிகரிக்க கூடும்.

இது சம்பந்தமான பல்வேறு வகையான மதிப்பு கூட்டுதல் தொழில் இந்தியாவில் நடக்கக்கூடும்.

மிகப்பெரிய பிரகாசமான ஏற்றுமதி வாய்ப்பு இம்மூன்று பொருள்களுக்கும் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer

Comments