ஓசூரில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்கள்

ஓசூர் அதிகளவிலான இயந்திர சாமான்கள் உற்பத்தி செய்யப்படக்கூடிய இடம்.  பெங்களூர் போன்ற மிகப்பெரிய நகரத்திற்கு அருகில் இருப்பதால் தமிழகம் மற்றும் கர்நாடகா இரண்டு மாநிலத்திற்கும் தேவையான அனைத்து இயந்திர சாமான்களும் இங்கிருந்து பெருமளவில் வாங்கப்படுகின்றன.

உள்நாட்டு வணிகம் தவிர்த்து பல்வேறு இயந்திர சாதனங்கள் மற்றும் இயந்திர உதிரி பாகங்கள் பல நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஓசூர் பகுதியில் அதிகளவிலான கட் பிளவர்ஸ் பசுமைக்குடிலில் பயிரிடப்படுகின்றன ஏனென்றால் இது போன்ற மலர்கள் வளர்ப்பதற்கு சாதகமான சூழல் இங்கு நிலவுகிறது.

இந்த கட் பிளவர்ஸ் அதிக அளவில் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக காதலர் தினத்தன்று உலக அளவில் அதிக காதலர்கள் மலர்களை பரிமாறிக் கொள்வார்கள் எனவே பிப்ரவரி மாதம் இதற்கான ஏற்றுமதி கணக்கில் அடங்காமல் இருக்கும்.

ஓசூர் பகுதியில் குடைமிளகாய் மற்றும் சில பழ வகைகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன இவைகளும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.
சில்வர் ஆனியன் எனப்படும் சிறிய வகை வெள்ளை வெங்காயம் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பு பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

Comments