இந்த காலகட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு மக்கள் வீட்டிலேயே முடங்கி கொண்டிருக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஆண்களும் பெண்களும் வேலைக்குச் செல்ல முடியவில்லை குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.
இந்தியாவில் பெண்கள் இரவில் மட்டுமே அணியக்கூடிய நைட்டி பால் முழுவதும் பெண்கள் அணிந்திருக்கின்றனர்.
மூன்று மாதங்களுக்கு மேலாக இது போன்ற ஆடைகளை தொடர்ந்து அணிந்து வருவதால் அந்த ஆடைகள் நைந்து கிழிந்து போகக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியா முழுவதும் பெண்கள் அணியக்கூடிய இந்த நைட்டி காண தேவை அதிகரித்துள்ளது.
அதேபோல குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு விளையாடிக் கொண்டு உள்ளனர் பள்ளிக்குச் செல்லவில்லை. இதனால் அவர்கள் அணியும் ஆடைகளும் வெகு விரைவில் நைந்து போகக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
பெண்களுக்கான நைட்டி போலவே குழந்தைகள் ஆடைகளுக்கான தேவையும் பெருமளவு அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்று பெண்களுக்கான ஆடைகளும் பெண்களுக்கான உள்ளாடைகளும் குழந்தைகளுக்கான ஆடைகளும் அதிக அளவில் தேவைப்படுகிறது.
எனது நண்பர் ஒருவர் திருப்பூரில் ஐரோப்பிய நாட்டிற்கு கடந்த ஏழு வருடங்களாக துணிகளை அனுப்பிக் கொண்டிருந்தார்.
அந்த இறக்குமதியாளர் எப்போதும் எல்சி பேமெண்ட் மூலமே பணம் கொடுப்பதுண்டு.
கடந்த வாரம் குழந்தைகளுக்கான ஆடைகளுக்கான ஆர்டர் கொடுத்துவிட்டு 100% பணத்தை ஏற்றுமதியாளர் வங்கியில் செலுத்தி எவ்வளவு விரைவில் அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவில் அனுப்புங்கள் மீண்டும் ஒரு ஆர்டர் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
இது எந்த அளவிற்கு வெளிநாட்டில் ஆடைகளுக்கான
தேவை உள்ளது என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது....
எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி பற்றி அறிந்து கொள்ள - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
Comments
Post a Comment