கோயம்புத்தூரில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள்


கோயம்புத்தூர் ஒரு தென்னிந்திய மான்செஸ்டர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  அந்த அளவிற்கு சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாகவே தொழிலில் சிறந்து விளங்கிய ஒரு ஊர்.

இங்கு நிறைய பஞ்சு வரவு அமல்கள் ஆரம்பகாலத்தில் இருந்தன ஸ்பின்னிங் மில் களும் பெருமளவில் இருந்தன.

ஒரு காலத்துக்கு முன்பிருந்தே இவர்கள் காட்டன் மற்றும் காட்டன் டெக்ஸ்டைல்ஸ் போன்றவற்றை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் சோமனூர் விசைத்தறி மற்றும் கைத்தறி கூடங்களுக்கு பெயர் பெற்ற ஊர். இங்கு தயாரிக்கப்படும் காட்டன் துணிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பொதுவாகவே கோயம்புத்தூர் மாவட்டம் என்பது நீர் வளம் அதிகம் உள்ள மாவட்டம்.  விவசாயத்திற்கு பஞ்சமில்லை.

கோயம்புத்தூரில் விவசாய பல்கலைக்கழகம் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  அந்தப் பல்கலைக்கழகத்தில் அடிக்கடி விவசாயிகளுக்கான மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடைபெற்று வருகிறது.  ஒரு விவசாயியை தொழிலதிபர் ஆக்குவதும் அந்த தொழிலதிபரை ஏற்றுமதி ஆக்குவதும் சத்தமில்லாமல் விவசாய கல்லூரி செய்து கொண்டிருக்கிறது.  ஆகவே இங்குள்ள விவசாயிகள் பொருள்களை விளைவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அந்த பொருட்களின் மதிப்பு கூட்டி உலக அளவில் சந்தை படுத்துகின்றனர்.

கோயம்புத்தூரில் இருந்து அதிக அளவில் அரிசி ஏற்றுமதி ஆகிறது.  

கோயம்புத்தூரில் பல்வேறு இயந்திரங்கள் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.  இந்த நிறுவனங்கள் பல்வேறு நாடுகளுக்கு தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்கின்றன.  அப்படி ஏற்றுமதி செய்வதற்கு பேருதவியாக இருப்பது இன்ஜினியரிங் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கழகம்.  இந்த கழகத்தின் அலுவலகம் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது.

இந்தியாவிலேயே வீடு மற்றும் ஹோட்டல்களுக்கு தேவையான கிரைண்டர் களைத் தயாரிக்கும் தொழிற்சாலை கோயம்புத்தூரில் மட்டுமே உள்ளது.

இங்க இருந்து தயாரிக்கப்படும் கிரைண்டர்கள் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகின்றன மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி பற்றி அறிந்து கொள்ள - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

Comments