அமேசான் மூலம் ஏற்றுமதி செய்த இந்தியர்கள்

நாட்டிலுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அமேசானின் உலகளாவிய விற்பனை திட்டத்தின் கீழ், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.‘அமேசான்’ நிறுவனம், கடந்த, 2015ல், உலகளாவிய விற்பனை திட்டத்தை அறிமுகம் செய்தது.


இதன் மூலம், இந்தியாவைச் சேர்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அமேசானின் உலகளாவிய, 15 இணைய தளங்கள் மூலம், வெளிநாடுகளில் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு உருவானது.துவக்கத்தில், சில நுாறு விற்பனையாளர்களுடன் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், இப்போது, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் இணைந்திருக்கிறார்கள்.

வரும், 2025ம் ஆண்டுக்குள், 10 பில்லியன் டாலர் அதாவது, 75 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு, மொத்த ஏற்று மதியை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக, கடந்த ஜனவரியில், அமேசான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அமித் அகர்வால் தெரிவித்து உள்ளதாவது:அமேசானின் உலகளாவிய விற்பனை திட்டத்தின் மூலம், உள்ளூர் நிறுவனங்கள், உலகளவில் தங்கள் விற்பனையை கொண்டு செல்ல முடியும்.இதன் மூலம், அவர்களால் உலகளவில் சிறப்பான பிராண்டுகளை உருவாக்க முடியும்.

முதல் நுாறு கோடி டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை எட்ட, மூன்று ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த, 100 கோடி டாலரை எட்ட, 18 மாதங்களே ஆகியிருக்கின்றன.விரைவில், 1 கோடி குறு சிறு நடுத்தர நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முயற்சித்து வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer

Comments