உலக அளவில் இறக்குமதியாளர்கள் துறைமுகத்தில் இருந்து பொருட்களை எடுக்க வேண்டும் என்றால் இருக்கும் நடை முறையில் சரியான ஆவணங்களை சமர்ப்பிப்பது மட்டுமே.
ஆனால் பெங்களூர் ஏர்போர்ட் மற்றும் சென்னை ஏர்போர்ட், சென்னை துறைமுகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகம் ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவில் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் விடுவிக்கப்படவில்லை.
இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது திருப்பூரில் ஏற்றுமதி தொழில். பனியன் களுக்கு தேவைப்படும் பட்டன் லேஸ், ஜிப் போன்ற பொருட்கள் சைனாவிலிருந்து பல ஆண்டுகளாக இறக்குமதி செய்வதுதான் நடைமுறை.
பெரும்பாலான வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் சில நேரங்களில் சைனாவில் இருந்து நேரடியாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு இது போன்ற பொருட்களை அனுப்புவதும் உண்டு.
இப்படி துறைமுகத்தில் தேங்கி இருக்கும் நிலையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எப்படி சரியான நேரத்திற்கு பொருட்களை டெலிவரி செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளனர்.
ஏற்றுமதியில் நேரமே முக்கியம். சரியான நேரத்திற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யாவிட்டால் இறக்குமதியாளர் ஆர்டரை கேன்சல் செய்வதுண்டு மீண்டும் அந்த ஆர்டர் இந்திய ஏற்றுமதியாளர்கலுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே.
எந்த ஒரு நியாயமான சரியான காரணமும் இல்லாமல் சீனாவிலிருந்து வந்த பொருட்களை துறைமுகத்தில் தேக்கி வைப்பது உள்நாட்டுத் தேவைக்கு விடுவிக்காமல் இருப்பதும் இந்திய ஏற்றுமதியாளர்கள் மட்டுமல்ல இந்திய அரசையும் பாதிக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டுக்கு கிடைக்கும் அந்நியச்செலாவணி நின்று போகும் சூழல் உள்ளது..
எங்களது ஏற்றுமதி பயிற்சி வகுப்பு பற்றி அறிந்துகொள்ள - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
Comments
Post a Comment