தென்னிந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இந்தியன் ரயில்வே...
தென்னிந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருளை சாலை வழியாகவோ, ரயில் வழியாகவோ ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு, ஆனால் அந்த வாய்ப்பு இப்போது கைகூடி வந்திருக்கிறது.
குண்டூர் ரயில்வே கோட்டத்தில் இருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு நேரடி நிரந்தர ரயில் சரக்கு போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நாசிக் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மட்டுமே பங்களாதேஷ் நாட்டின் ஏற்றுமதி சந்தையை கையில் வைத்திருந்தனர். இப்போது மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பு தென்னிந்தியர்களும் அதிக அளவில் பங்களாதேஷ் ஏற்றுமதி சந்தையைக் கைப்பற்றலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
முதன்முதலில் குண்டூரில் இருந்து சிகப்பு மிளகாய் பங்களாதேஷிற்கு ரயில் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
அதற்கடுத்து பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
மாண்புமிகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 54,000 மெட்ரிக் டன் அளவிற்கு மஞ்சள் பங்களாதேஷிற்கு குண்டூரில் இருந்து ரயில் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
எதிர்காலத்தில் பல்வேறு வாசனை பொருட்கள் மற்றும் பங்களாதேஷ் இறக்குமதி செய்யும் பல பொருட்கள் தென் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆவதற்கான வாய்ப்பு கைகூடி உள்ளது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எங்களது பிரத்யேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பு பற்றி அறிய - அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
Comments
Post a Comment