அடுத்த வருடம் அதிக அளவில் ஏற்றுமதி ஆகப்போகும் பொருள்



மஞ்சள் ஏற்றுமதி அதிக அளவில் அடுத்த வருடம் அதிகரிக்கப் போகிறது.  சாதாரண மஞ்சள் ஒரு ஏக்கருக்கு 15 டன் அளவுக்கு விளையும்.  தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய ரகமான பிரதீபா மஞ்சள் 35 டன் அளவுக்கு ஒரு ஏக்கருக்கு விளைகிறது.  இந்த மஞ்சள் தாய்லாந்து இத்தாலி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  வெளிநாடுகள் பல இந்த மஞ்சளை விரும்பி வாங்கினாலும் கேரளா அதிக அளவில் தமிழக விவசாயிகளிடம் இருந்து பிரதீபா விதை மஞ்சளை கொள்முதல் செய்துள்ளது.

சுமார் 800 டன் அளவுக்கு கேரளா 40 ரூபாய்க்கு விதை மஞ்சளை வாங்கி கேரளாவிலுள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் 10 ரூபாய்க்கு கொடுத்துள்ளது.  இதன்மூலம் அடுத்த ஆண்டு அதிக அளவில் பிரதீபா மஞ்சளை விளைவிக்கவும் ஏற்றுமதி செய்யவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
கேரளா மட்டுமல்லாமல் கர்நாடகா மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் பிரதீபா மஞ்சளை அதிக அளவில் நடவு செய்துள்ளன.

இந்திய அளவில் பல மாநிலத்திற்கு பிரதீபா மஞ்சள் விதைகளை கொடுத்த தமிழகம் மிகக் குறைந்த அளவே நடவு செய்து உள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம்.  இதற்கு ஒரே காரணம் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை மட்டுமே.

மஞ்சளில் இருந்து எடுக்கப்படும் குர்குமின் என்ற வேதிப்பொருளுக்கு உலக அளவில் அதிக மவுசு உள்ளது.  100 கிலோ மஞ்சளில் இருந்து சுமார் அறிந்து இருந்து ஆறு கிலோ அளவுக்கு குர்குமின் கிடைக்கும்.

இதுவரை காய்ந்த மஞ்சளை வாங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா இப்போது பொருட்களின் தேவை அதிகமாக இருப்பதால் பச்சை மஞ்சளையும் வாங்க துவங்கியுள்ளது..

ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட ஆசையா? -https://sites.google.com/view/exportconsultation/export-seminar

#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer

Comments