கொரோனா காலத்தில் ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கறிவேப்பிலை..

சமீபத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஒரு சிறப்பு விமானம் அங்குள்ள தமிழர்களை அழைத்துக்கொண்டு கோயம்புத்தூர் வந்தது.  இந்த விமானத்தில் 142 ஆண்கள் 33 பெண்களை 5 குழந்தைகள் மற்றும் 4 கைக்குழந்தைகள் ஆகியோர் வந்தனர்.
இவர்களை அழைத்து வந்த விமானம் பயணிகள் யாரையும் இங்கிருந்து ஏற்றாமல் வெறுமனே திரும்பிச் செல்லாமல் தங்கள் நாட்டிற்கு தேவையான காய்கறிகள் கறிவேப்பிலை பழங்கள் உட்பட சுமார் 3 டன் சரக்குகளை கொண்டு சென்றது.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் சரக்கு மற்றும் பொதுப் போக்குவரத்து விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டதால் இதுபோன்று தமிழர்களை அழைத்து வரக் கூடிய விமானங்கள் மூலம் அந்தந்த நாடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தமிழக ஏற்றுமதியாளர்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டும் ஸ்பைஸ் ஜெட் விமானம் அரபு நாடுகளுக்கு கோயம்புத்தூரிலிருந்து காய்கறிகள் பழங்கள் உட்பட பல்வேறு பொருட்களை எடுத்துச்செல்கிறது.

ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட ஆசையா? -https://sites.google.com/view/exportconsultation/export-seminar

Comments