கொரோனா காலத்திலும் சாதனைபடைத்த திருச்சி ஏற்றுமதியாளர்கள்.
திருச்சி விமான நிலையம் மூலமாக உலகில் பல்வேறு பகுதிகளுக்கும் பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
குறிப்பாக திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் இருந்து பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள் வளைகுடா நாடுகளுக்கும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
கொரோனா அனைத்தையும் முடக்கிப் போட்டு விட்டது. ஆனாலும் திருச்சி ஏற்றுமதியாளர்கள் முடங்கிப் போக வில்லை.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் விமானம் ரத்து பண்ணப்பட்ட சூழலிலும் சில விமானங்கள் இயக்கப்பட்டன.
வெளிநாட்டில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் விதமாக இந்தியாவில் இருந்து சில விமானங்களும் அரபு நாடுகளில் இருந்து சில விமானங்களும் இயக்கப்பட்டன.
அப்படி இயக்கப்பட்ட விமானங்களில் ஒருவழிப் பாதையில் பயணிகள் யாரும் இல்லை. உதாரணமாக அரபு நாட்டிலிருந்து ஒரு விமானம் அங்குள்ள தமிழர்களை அழைத்துக்கொண்டு திருச்சி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த விமானம் திரும்பி போகும்போது பயணிகள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி வெறும் விமானம் திரும்பிப் போகும் போது அதில் பழங்கள் காய்கறிகள் பூக்கள் போன்றவற்றை அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர் திருச்சி ஏற்றுமதியாளர்கள். இதேபோல இந்தியாவில் இருந்து குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து அரபு நாடுகளில் உள்ள தமிழர்களை அழைத்து வரச் செல்லும் விமானத்திலும் பொருட்களை அனுப்பி வைத்தனர்.
இப்படி அவ்வப்போது இயக்கப்பட்ட விமானங்கள் மூலம் கடந்த மூன்று மாதத்தில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மட்டும் 230 டன் காய்கறிகள் பழங்கள் பூக்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தியாவிலேயே வெளிநாட்டில் அதிகம் பணிபுரிபவர்களை கொண்ட மாநிலம் கேரளா. இந்த காலகட்டத்தில் அரபு நாடுகளிலிருந்து கேரளாவுக்கும் கேரளாவில் இருந்து அரபு நாடுகளுக்கும் தான் அதிக விமானங்கள் இயக்கப்பட்டு கேரள மக்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
ஆனால் கொச்சின் விமான நிலையம் மூலமாக கூட இந்த அளவுக்கு காய்கறிகள் பழங்களை ஏற்றுமதி செய்யப்படவில்லை.
இந்தியாவிலேயே இந்த நெருக்கடியான காலகட்டத்தில்கூட அதிக அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்த பெருமை திருச்சி ஏற்றுமதியாளர்களுக்கு திருச்சி விமான நிலையத்திற்கும் உண்டு.
எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பு பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
Comments
Post a Comment