திருப்பூரில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்கள்

திருப்பூரில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்கள்

பிரிட்டிஷார் காலத்திலிருந்தே கோயம்புத்தூரில் எவ்வாறு பருத்தி அரவை தொழில் புகழ்பெற்றிருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  அதே காலகட்டத்தில் திருப்பூர் பகுதி ஆங்காங்கே பருத்தி அரவை தொழிலை கொண்டிருந்தது.

சிறிது காலத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல ஆயத்த ஆடை தொழில் வளரத்தொடங்கியது.  திருப்பூரில் இருந்து பல்வேறு வகையான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள் திருப்பூர் பகுதியில் உள்ளது.

மத்திய அரசின் ஆயத்த ஆடை மேம்பாட்டு கழகம் திருப்பூரில் உள்ளது.

திருப்பூர் பகுதியில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ஆகிறது.

ஆயத்த ஆடைகள் தவிர்த்து இங்கு எவர்சில்வர் தொழில் பட்டறை உள்ளது.  இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு எவர்சில்வர் சாமான்களும் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.
திருப்பூர் அருகிலுள்ள அவிநாசி பகுதியில் பூண்டி என்ற இடத்தில் சிலை தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.  இங்கிருந்து வெளிநாட்டில் உள்ள பல்வேறு இந்து கோயில்களுக்கு கற்சிலைகள் ஏற்றுமதி ஆகின்றன.

எங்களது ஏற்றுமதி பயிற்சி வகுப்புகள் பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

Comments