தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா அரிசி ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.
Covid-19 மற்றும் பருவநிலை மாற்றத்தால் தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து விவசாய பணிகளுக்கு மத்திய மாநில அரசுகள் விலக்கு அளித்து விட்டன.
விவசாய பணிகளில் ஆங்காங்கே சில தடங்கல்கள் வந்தாலும் பெரும்பாலும் செவ்வனே நடைபெற்று வருகின்றன.
இதுவரை தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் அரிசியை வாங்கிக் கொண்டிருந்த இறக்குமதியாளர்கள் இப்போது இந்தியா பக்கம் வர வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவிடம் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று ஒரு கணிப்பு நிலவுகிறது.
இப்பொழுது கேள்விக்குறியாக இருப்பது பருவ மழையை மட்டுமே.
பருவமழையும் நமக்கு சாதகமாக அமைந்தால் இந்த வருட அரிசி ஏற்றுமதி என்பது இதுவரை இருந்து அளவைவிட மிக மிக அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு...
எங்களது ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
Comments
Post a Comment