ஏற்றுமதி தடையை நீக்கிய மத்திய அரசு

ஏற்றுமதி தடையை விலக்கிய மத்திய அரசு.

தனிமனித பாதுகாப்பு கவசம் களுக்கான ஏற்றுமதியை மத்திய அரசு இதுநாள் வரை நிறுத்தி வைத்திருந்தது.

இந்தியாவில் நோய்தொற்று தீவிரமாக பரவி கொண்டிருந்தாலும் முழு ஊரடங்கு பல இடங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டது தனிமனித பாதுகாப்பு கவசங்களை இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கினர.

குறிப்பாக திருப்பூர் ஒரு நாளைக்கு எட்டு லட்சம் தனிமனித கவசங்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு திறன் கொண்டதாக விளங்கியது.

பல்வேறு நாடுகளில் இதற்கான தேவைகள் இருப்பது கருத்தில் கொள்ளப்பட்டு திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.  
உள்நாட்டு தேவையை மிஞ்சும் அளவில் தனி மனித பாதுகாப்பு கவசங்களை நான் தயார் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கான தேவை பல்வேறு நாடுகளில் உள்ளது. நமக்கு வரவேண்டிய வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆர்டர்களை பாகிஸ்தான் சீனா வியட்னாம் உட்பட பல்வேறு நாடுகளில் பறித்துக் கொண்டு செல்கின்றன.  எனக்கு மத்திய அரசு மிக விரைவில் தனிமனித பாதுகாப்பு கவசங்கள்  ஏற்றுமதிக்கு அனுமதி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தன..

இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இப்போது தனிமனிதர் பாதுகாப்பு கவசம் களுக்கான ஏற்றுமதி அனுமதியை வழங்கியுள்ளது.

ஆனாலும் இது ஒரு வரம்பில்லா ஏற்றுமதி அனுமதி அல்ல.  மாதம் 50 லட்சம் பாதுகாப்பு கவசங்கள் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.  மிக விரைவில் இதற்கான தடையற்ற ஏற்றுமதிக்கான மாறி வரும் என்று சொல்கிறார்கள்.

இதன்மூலம் திருப்பூர் ஒரு புதிய ஏற்றுமதி  வாய்ப்பை பெறுகிறது..

எங்களது ஏற்றுமதி வகுப்பில் கலந்துகொள்ள - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

Comments

Post a Comment