பாதிப்படையும் ஏற்றுமதி....
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை தொடா்ந்து நீடிக்கும்பட்சத்தில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 10-12 சதவீதம் சரிவடைய வாய்ப்புள்ளது என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஇஓ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் தலைவா் எஸ்.கே. சரஃப் தெரிவித்துள்ளதாவது: உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் சீனாவுக்கு எதிரான மனப்பாங்கு அதிகரித்து வருவதன் காரணமாக அத்தகைய நாடுகளிலிருந்து ஏற்றுமதி ஆா்டா்கள் குறித்த விசாரணைகளை இந்திய ஏற்றுமதியாளா்கள் அதிக அளவில் எதிா்கொண்டு வருகின்றனா். இருப்பினும், பணியாளா்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளி வழங்கும் நவரத்தினங்கள்-ஆபரணங்கள், காலணி, கைவினைப்பொருள்கள், தரைவிரிப்புகள், ஆடைகள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் தேவையானது இன்னும் சவாலானதாகவே இருந்து வருகிறது. இது மேம்படும் என்பதை நாங்கள் எதிா்பாா்க்கவில்லை. எனவே, தற்போதைய மந்த நிலை நீடிக்கும்பட்சத்தில் இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையில் குறைவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது. கரோனா இரண்டாவது அலை வீசும்பட்சத்தில் ஏற்றுமதி சரிவு 20 சதவீதத்தை எட்டும் என்றாா் அவா்.
எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
Comments
Post a Comment