மருத்துவ பயன்பாட்டு முக கவசம், முழு கவச ஆடை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும் வகையில், ஏற்றுமதி கொள்கையில் மாற்றம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும், என, டி.ஜி.எப்.டி., கூடுதல் இயக்குனர் உறுதி அளித்துள்ளார்.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில் முக கவசம், முழு கவச ஆடை ஏற்றுமதி குறித்த கருத்தரங்கம், நடந்தது.கருத்தரங்கை துவக்கி வைத்து, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் பேசியதாவது:சர்வதேச அளவில், முக கவசம், முழு கவச ஆடைகள் தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசு, மருத்துவ பயன்பாட்டுக்கான முக கவசம், முழு கவச ஆடை ஏற்றுமதிக்கு விரைவில் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு மெஷின், நாளொன்றுக்கு ஒரு லட்சம் முக கவசங்களை உற்பத்தி செய்கிறது. 200க்கும் மேற்பட்ட மெஷின்கள் உள்ளதால், என் 95 முக கவசங்களை அதிகளவில் உற்பத்தி செய்யமுடியும்; எனவே, ஏற்றுமதிக்கு, தயக்கமின்றி அனுமதி வழங்கலாம்.இந்திய ஆயத்த ஆடை துறையினர், இவ்வகை முக கவசம், முழு கவச ஆடை ஏற்றுமதிக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.டி.ஜி.எப்.டி., கூடுதல் இயக்குனர் விஜயகுமார் பேசியதாவது:நமது நாட்டில், மருத்துவ பயன்பாட்டுக்கான முக கவசம், முழு கவச ஆடை ஏற்றுமதிக்கு தடை உள்ளது. மருத்துவ பயன்பாடு அல்லாத சாதாரண துணி முக கவசங்கள், முழு கவச ஆடை ஏற்றுமதிக்கு மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாதாரண முழு கவச ஆடைகள், அழகு நிலையங்கள், தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.மருத்துவ பயன்பாட்டுக்கான முக கவசம், முழு கவச ஆடை ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதற்காக, ஏற்றுமதி கொள்கையில் மாற்றம் கொண்டுவரும் வகையில், மத்திய ஜவுளி, சுகாதாரத்துறை அமைச்சகங்களுக்கு, டி.ஜி.எப்.டி., பரிந்துரைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.தேசிய சான்றிதழ் அமைப்புக்கான வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ரோஜேஷ் மகேஸ்வரி, 'அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் ஒப்புதல் பெற்றபின்னர், முக கவசம், முழு கவச ஆடை ஏற்றுமதிக்கான வர்த்தக வாய்ப்புகளை பெற, தொழில்முனைவோர் முயற்சிக்கவேண்டும்,' என்றார்.
முக கவசம் தயாரிப்வர்களின் விபரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் .
ReplyDelete