ஒரு தொழில் கதை
கர்நாடகாவில் திராட்சை விளைச்சல் என்பது அதிகம். அங்கு திராட்சை பயிரிடும் விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் சீசன் காலத்தில் விளைந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொண்டு மொத்த வியாபாரிகளிடம் கொடுத்து விடுவார்கள். அந்த வியாபாரிகள் கர்நாடகா முழுவதும் உள்ள சில்லறை வியாபாரிகளிடம் விற்று விட்டு சுமார் 30 லிருந்து 40 நாட்கள் கழித்து விவசாயிகளுக்கு பணத்தை கொடுத்து கணக்கை நேர் செய்து கொள்வார்கள். விவசாயிகளிடமிருந்து மொத்த வியாபாரிகள் சுமார் 40 ரூபாயில் இருந்து 45 ரூபாய் ஒரு கிலோ திராட்சையை வாங்குவார்கள். அது சில்லரை வியாபாரிகளுக்கு 80 லிருந்து ரூபாய் அளவிற்கு விற்கப்படும். சில்லரை வியாபாரிகள் மக்களுக்கு 180 லிருந்து 200 ரூபாய் வரை விற்பார்கள். இதுதான் அங்கு இருக்கும் நடைமுறை.
இந்த வருடம் நோய்த்தொற்று தாக்குதல் அதிகமாக இருப்பதால் மொத்த வியாபாரிகள் திராட்சை விற்பனை எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரியாது என்று கூறி கிலோ 15 ரூபாய்க்கு மட்டுமே எங்களால் வாங்க முடியும் என்று கூறிவிட்டார்கள். இது விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி.
கிலோ 40 ரூபாய்க்கு விற்றாலே விவசாயிகளுக்கு லாபம் என்று ஒன்றும் இருப்பதில்லை வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கும் ஆனால் 15 ரூபாய் என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விலை. இந்த அளவுக்கு கஷ்டப்பட விவசாயிகள் தயாராக இல்லாததால் அவர்கள் கர்நாடகாவில் உள்ள விவசாய பல்கலைக்கழக உதவியை நாடினார்கள்.
விவசாய பல்கலைக்கழகத்தில் உள்ள அதிகாரிகள் கர்நாடக விவசாயிகளுக்கு உதவ முன்வந்தனர். திராட்சைப் பழங்களை தரம் பிரிப்பதற்கு சுத்தப்படுத்துவதற்கு மற்றும் அட்டைப்பெட்டியில் பேக்கிங் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பேக்கிங் செய்யப்பட்ட திராட்சை பலன்கள் சின்னச்சின்ன டிரக் மூலமாக அரசாங்க அனுமதியுடன் விவசாய பல்கலைக்கழக பேனர் உடன் பெங்களூரில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் நேரடியாக சென்று அங்குள்ள மக்களுக்கு கிலோ 90 ரூபாய் என்ற அளவில் விற்கத் துவங்கினர்.
பெரிய பெரிய கடைகளில் ஒரு கிலோ திராட்சை பழம் 180 ரூபாய்க்கு வாங்கி பழக்கப்பட்ட மக்கள் விவசாய கல்லூரி துணையுடன் விவசாயிகள் நேரடியாக பாதி விலைக்கு விற்பதால் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
ஓரிரு நாட்களில் மொத்த திராட்சைப் பழமும் விற்றுத் தீர்ந்தது.
விவசாயிகளுக்கும் பணம் உடனடியாக கிடைத்தது. வியாபாரிகளிடம் விற்கும் விலையைவிட இரண்டு மடங்கிற்கு மேல் கிடைத்தது.
இந்த நடவடிக்கையை மேற்கொண்ட விவசாயக் கல்லூரி நிச்சயமாக பாராட்ட வேண்டும்.
எங்கள் ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
Comments
Post a Comment