இந்தியாவில் மஞ்சள் ஏற்றுமதி எப்படி நடைபெறுகிறது என்பதை பார்க்கலாம்.
உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சளில் இந்தியா சுமார் 80 சதவீதத்தை அறுவடை செய்கிறது.
சீனா மியான்மர் நைஜீரியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் மஞ்சள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் இந்திய மஞ்சளுக்கு தனி மவுசு என்றும் உள்ளது.
இந்தியா முழுவதும் பரவலாக பல்வேறு இடங்களில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஈரோடு ஆத்தூர் சேலம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் மஞ்சள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது
மஞ்சள் கான மொத்த விலை மார்க்கெட் ஈரோடு என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஈரோட்டை விட பல மடங்கு அதிக மஞ்சள் போக்குவரத்து இருக்கும் ஒரு மார்க்கெட் மகாராஷ்டிரா மார்க்கெட்.
சீசன் காலத்தில் தோராயமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு ஆயிரம் மூட்டைகள் வரத்து இருந்தால் அதே காலகட்டத்தில் மகாராஷ்டிரா மார்க்கெட்டுக்கு 30 ஆயிரம் மூட்டைகள் வரத்து இருக்கும். இதை வைத்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் மகாராஷ்டிரா மார்க்கெட் உடைய அளவு என்ன என்று.
இறக்குமதியாளர்கள் மஞ்சளை வாங்கும்போது அதனுடைய நீளம் தடிமன் கணம் மற்றும் வண்ணம் ஆகியவற்றை கணக்கில் கொண்டே வாங்குகின்றனர்.
பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறுவடை இருக்கும். ஏற்றுமதியாளர்கள் மொத்தமாக தரமான மஞ்சளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் ஏற்றுமதி செய்வார்கள்.
மஞ்சளை உடைத்துப் பார்க்கும் போது உள்புறம் கருப்பு வட்டமும் கோடுகளோ இருக்கக்கூடாது அப்படி இருந்தால் இறக்குமதியாளர்கள் நிராகரித்து விடுவார்கள்.
மஞ்சள் ஏற்றுமதி செய்யும் முன்பு ஸ்பைசஸ் போர்டு எனப்படும் நறுமணப் பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சி வாரியத்தில் ஒரு தரச்சான்றிதழ் பெறவேண்டும். இந்த தரச் சான்றிதழ் இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியாது. மஞ்சள் தரச்சான்றிதழ் பெறும்போது அதில் குர்க்குமின் எனப்படும் வேதிப்பொருளின் அளவை இறக்குமதியாளர்கள் முக்கியமாக கவனிப்பார்கள்...
ஆன்லைன் மூலமாக ஏற்றுமதி கலந்தாய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 1 2020 இல் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் நீங்கள் பங்கேற்க விரும்பினால் 91-90434413 74 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்...
இந்த கலந்தாய்வுக்கான கட்டணம் ரூபாய் 1000 மட்டுமே.
Comments
Post a Comment