நவம்பர் மாதம் பதினாறாம் தேதி நாக்பூரில் சிறு குறு தொழில் கூட்டமைப்புக்கான மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாட்டில் சுமார் 11 கோடி வேலைவாய்ப்புகளை சிறு குறு தொழில்கள் உருவாக்குகின்றன என்று பெருமையுடன் பேசியுள்ளார்.

நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் இந்த சிறு குறு தொழில் முனைவோர்கள் 48 சதவீதம் பங்கு கொண்டனர் என்றும் கூறியுள்ளார்.
மத்திய அரசு அன்னிய செலாவணியை சேமிக்கும் நோக்கில் வருங்காலங்களில் ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் அதிகமாக மேற்கொள்ள உள்ளது என்று கூறியுள்ளார்.
நம் நாட்டில் இறக்குமதியாகும் பொருட்களுக்கான தேவைகளை கண்டறிந்து முடிந்தவரையில் இறக்குமதியைக் குறைத்து தேவைப்படும் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு முயற்சி செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

சிறு குறு தொழில் கூட்டமைப்பில் உள்ள நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன் படி வருங்காலத்தில் அரசு அதிக முதலீடுகளை மேற்கொள்ளும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
சிறு குறு தொழிலில் இந்தியா சிறந்து விளங்குகிறது, இதில் சுமார் 45% வெளிநாட்டு விற்பனையும் 55 சதவீதம் உள்நாட்டு விற்பனையும் உள்ளது என்று நிதின் கட்கரி கூறி பெருமை பட்டுள்ளார்.
நம் நாட்டின் முதுகெலும்பு சிறு குறு தொழில்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

சமீபத்தில் அரசு மேற்கொண்ட வரி விதிப்பால் சற்று சிரமத்தை சந்தித்தாலும், வருங்காலத்தில் அரசு எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலம் இந்த சிக்கலிலிருந்து மீண்டு வரும் என்று நம்புவோம்.
Excellent sir
ReplyDelete