இந்திய மக்கள் மாம்பழ சுவைக்கு அடிமை என்பது மிகையல்ல, அதிலும் அல்போன்சா ரகம் என்பது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.
இந்தியாவில் மாம்பழ சீசன் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டுமே. அக்டோபர் முதல் டிசம்பர் காலம்வரை இந்தியாவில் மாம்பழங்கள் கிடைப்பதில்லை.

இந்த முறை சீசன் முடிந்தும் மும்பை காய்கறி மார்க்கெட்டுகளில் மாம்பழங்களில் வரத்து தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த மாம்பழங்கள் எங்கிருந்து வந்தன என்று ஆராய்ந்த போது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.
பல வருடங்களுக்கு முன்பு ரத்தனகிரி பகுதியில் இருந்து தரமான அல்போன்சா ரக மாம்பழ கன்றுகளை இறக்குமதி செய்த தென்ஆப்பிரிக்கா, மலாவி என்ற பகுதியில் 25 ஹெக்டேரில் அந்த கன்றுகளை நட்டு வளர்க்கத் துவங்கினர்.

அது நாளடைவில் 600 ஹெக்டேராக விரிந்தது.
இந்தியாவில் அல்போன்சா விளையும் கொங்கு மண்டலப் பகுதியில் என்ன தட்பவெப்ப நிலை உள்ளதோ அதே தட்பவெட்பநிலை தென் ஆப்பிரிக்காவில் மலாவி பகுதிகளில் நிலவுகிறது.
இந்தியாவில் சீசன் முடிந்த பிறகுதான் மலாவாயில் சீசன் ஆரம்பிக்கிறது என்பது நம்மூர் மாம்பழ வியாபாரிகளுக்கு இனிப்பான செய்தி. இந்தியாவிலும் அங்கும் ஒரே காலகட்டத்தில் சீசன் நிலவினால் அங்கு இருந்து செய்யப்படும் இறக்குமதி நம்ம ஊர் வியாபாரிகளை பதம் பார்த்து விடும்.
அதேநேரத்தில் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால் வருடம் முழுவதும் இனி அல்போன்சா மாம்பழம் கிடைக்கும்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் மாம்பழத்தின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இந்த மாம்பழம் அளவில் சற்று சிறியதாக உள்ளது, ஆனால் சுவை இந்திய அல்போன்சா போன்று உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக மும்பைக்கு விமான சேவை இல்லாததால் கிலோவுக்கு 200 ரூபாய் வரை அதிகம் கொடுக்க வேண்டி இருப்பதாக மாம்பழ இறக்குமதியாளர்கள் சொல்கிறார்கள்.
ஒரு பெட்டிக்கு 3 கிலோ மாம்பழங்களை வைத்து அவர்கள் இறக்குமதி செய்கிறார்கள் நேரடி விமான சேவை இருந்தால் விலை இன்னும் குறையலாம். இந்திய அரசு இதுபோன்ற மாம்பழத்திற்கு 38 சதவீத வரி விதிக்கிறது என்பது கூடுதல் செய்தி.
Amazing sir
ReplyDelete