ஏற்றுமதி உரிமம் பெறுவது எப்படி?

ஏற்றுமதி தொழில் செய்வதற்கு ஏற்றுமதி உரிமம் கட்டாயம் ஆனால்
பெரும்பாலான மக்கள் ஏற்றுமதி உரிமம் பெறுவதற்கு
அதிக முக்கியத்துவமும் கவனமும் கொடுக்கிறார்கள்.

உண்மையிலேயே இந்த கவனம், முக்கியத்துவம் அனைத்தும்
எப்படி ஏற்றுமதி தொழில் செய்வது?
எந்த பொருளை தேர்ந்தெடுப்பது?
அந்த பொருள் எந்த நாட்டில் தேவை அதிகம் உள்ளது என்பதை கண்டுபிடிப்பது?
அந்த நாட்டில் அந்த பொருளை வியாபாரம் செய்யும்
இறக்குமதியாளரை கண்டு பிடிப்பது போன்ற பல்வேறு விஷயங்களில்
இந்த கவனம் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

ஏற்றுமதி செய்வதற்கு லைசென்ஸ் முக்கியம்தான் ஆனால்
நமது நிதி கையிருப்பு, நமது முதலீடு, நாம் தேர்ந்தெடுக்கும் பொருள்,
அந்த பொருளின் எதிர்கால தேவை, போன்ற பல்வேறு விஷயங்களில்
கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஆடிட்டரை பார்த்து அல்லது
ஏற்றுமதி-இறக்குமதி ஆலோசகரை பார்த்து அவர்களிடம்
இந்த பொறுப்பை நீங்கள் ஒப்படைக்க வேண்டும்.

நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் அதிகபட்சம் அனைத்து அரசு பதிவுகளுக்கும்
(நிறுவன பதிவுகள் மற்றும் உரிமம் ) 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகாது.

ஏற்றுமதி உரிமைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூபாய் 500 மட்டுமே
ஆனால் அதற்கு முன்பாக நீங்கள் ஒரு நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும்
அந்த பதிவை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு துவங்க வேண்டும்,
அதாவது நடப்பு கணக்கு துவங்க வேண்டும்.

அதன்பிறகு ஏற்றுமதி-இறக்குமதி லைசென்ஸ் எனப்படும் உரிமத்தை நீங்கள்
பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.  அப்படி உரிமை வாங்கும் போது
உங்களது வங்கியிலிருந்து நீங்கள் ஒரு கடிதம் பெற்று அதனை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அனைத்து செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூபாய் பத்தாயிரம் செலவாகும்.
இந்த பத்தாயிரம் என்பது அதிகபட்ச தொகையை என்பதை
இங்கு நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
White Water Boat
நீங்கள் இணையம் மூலமாக உரிமம் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டாம்.
அது அத்தனை எளிதல்ல.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் தொழிலதிபராக நீங்கள் முயற்சிக்கும்
பட்சத்தில் இந்த இடத்தில் நீங்கள் ஒரு தொழிலதிபர் போல நடந்து கொள்ள வேண்டும்.

எந்தெந்த வேலையில் யார் நிபுணத்துவம் பெற்றவரோ அவரிடம்
அந்த வேலையை ஒப்படைத்துவிட்டு வேலை செய்வதற்கான
பணத்தை கொடுத்து விடுங்கள்.

ஒரு தொழிலதிபர் இந்த இடத்தில் வேலையாளாக மாறி விடக்கூடாது
என்பதே எனது கருத்து.
Brown Ship Helm
நான் முன்பே குறிப்பிட்டது போல ஏற்றுமதியாளர்கள் பொருள் தேர்வு செய்வது,
அதற்கான தேவை எந்த நாட்டில் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது,
அந்த நாட்டில் அந்தப் பொருளை யார் வாங்குவார்கள் என்று கண்டுபிடித்து
அவரோடு வணிகம் செய்வதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு உரிமம் பெறுவதற்கும், நிறுவனத்தை பதிவு செய்வதற்கும்
ஒரு ஏற்றுமதியாளர் அலைய கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து

Comments

  1. Very nice sir, in last few lines it's just followings all business people

    ReplyDelete

Post a Comment