ஏற்றுமதி சம்பந்தமான குறுகிய பயிற்சியில் நாம் கற்றுக்கொள்ள போவதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஏற்றுமதி பணப்பரிமாற்ற முறைகள்
- ஏற்றுமதியில் எந்தந்த வகையில் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது?
- ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான பணப்பரிமாற்ற முறை எது?
- இறக்குமதியாளர்களுக்கு சாதகமான பணபரிமாற்ற முறை எது?
- இருவருக்கும் சாதகமான பணப்பரிமாற்ற முறை எது?
- எது அதிக ரிஸ்க் உள்ள பணப்பரிமாற்றம்?
போன்ற பல்வேறு ஏற்றுமதி பணப்பரிமாற்ற முறைகள் விளக்கப்படும்.

ஏற்றுமதி ஆவணங்கள்
- ஒரு ஏற்றுமதியாளர் என்னென்ன ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் எப்படி தயார் செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவான விளக்கம்.
- ஒரு ஷிப்பிங் ஏஜென்ட் என்னென்ன ஆவணங்களை தயார் செய்வார் அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பது பற்றிய விளக்கம்.
- எந்தெந்த ஆவணங்களை வெளிநாட்டு பையருக்கு நேரடியாக அனுப்பலாம், எந்தெந்த ஆவணங்களை மறைமுகமாக கூட அதாவது ஜெராக்ஸ் காப்பி கூட வெளிநாட்டு பையருக்கு அனுப்பக்கூடாது என்பது பற்றிய விவரம்.

ஏற்றுமதி பொருள் தேர்வு
50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்து லட்ச ரூபாய் வரை பல்வேறு முதலீடுகளில் ஏற்றுமதிக்கு உகந்த பொருட்களை பட்டியலிட்டு அதற்கான இறக்குமதியாளர் எந்த நாட்டில் இருக்கிறார் அவரை எப்படி கண்டுபிடிப்பது அவரிடம் எப்படி ஆர்டர் பெறுவது போன்ற விரிவான விளக்கம்.
இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்கும் வழிமுறைகள்
இணையத்தை பயன்படுத்தி ஒரு இறக்குமதியாளரை உங்கள் இணையத்தளம் அல்லது முகநூல் பக்கத்திற்கு வரவழைப்பது எப்படி மற்றும் நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களை உலகில் பல்வேறு நாடுகளில் இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்வது எப்படி போன்ற விவரங்கள் கற்றுத்தரப்படும்.
ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர் சந்திப்பு மூலம் நீங்கள் எப்படி ஆர்டர் பெறுவது? ஒரு இறக்குமதியாளரை நேரடியாக சந்திக்கும்போது நீங்கள் எப்படி தயாராக வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்கள் விரிவாக விளக்கப்படும்.

கொட்டேஷன் அனுப்பும் வழிமுறைகள்
- ஒரு ஏற்றுமதியாளர் எப்படி தவறில்லாமல் கொட்டேஷன் கணக்கிடுவது.
- என்னென்ன கொட்டேஷன் நடைமுறைகள் உள்ளன.
- அவற்றில் உள்ள சிக்கல் என்ன.
- கொட்டேஷன் நடைமுறையில் ஒரு இறக்குமதியாளர் ஏற்றுமதியாளரை எப்படி எல்லாம் ஏமாற்ற வாய்ப்புள்ளது என்பதை பற்றி விளக்கி அப்படி ஏமாறாமல் இருக்க ஒரு ஏற்றுமதியாளர் எப்படி அந்த நடைமுறையை கையாள வேண்டும் என்பதையும் விளக்கிச் சொல்லப்படும்.

இந்த ஏற்றுமதி கிராஷ் கோர்ஸ் வரும் December மாதம் 8ம் தேதி, 2019, சென்னையில்,
நடைபெற உள்ளது.
இதற்கான கட்டணம் ரூபாய் 1000 மட்டுமே.
இதில் கலந்து கொள்ள விரும்பினால் 9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸப் அனுப்பவும்
வணக்கம் sir நான் நித்தியா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை. எனக்கும் ஏற்றுமதி செய்ய விருப்பம்.சென்னையில் எங்கே வகுப்புகள் விவரங்கள் வேண்டும். நீங்கள் அளித்த எண்ணிற்கு வாட்ஸப் அனுப்புகிறேன். நன்றி.
ReplyDeleteKindly whatsapp me at 9043441374
Delete