வெங்காய ஏற்றுமதிக்கு தடை


வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
Red Onions
ஒரு சில வாரங்களுக்கு முன்பாக வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயித்தது. அப்போதே விரைவில் ஏற்றுமதிக்கான தடை வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதுபோல இப்போது வெங்காய ஏற்றுமதிக்கான தடை வந்துள்ளது.

வெங்காய ஏற்றுமதிக்கு தடை வருவது இந்தியாவில் இது முதல் முறையல்ல. ஏற்கனவே பலமுறை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்திருக்கிறது.

அப்படி தடை செய்யும் போதெல்லாம் நம் நாட்டிற்கு மிக அருகில் உள்ள பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும்.

பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்வதால் நமக்கு அதிகப்படியான செலவு ஆகாது. குறைந்த செலவில் சாலை வழியாகவே வெங்காயத்தை இந்தியாவுக்குள் கொண்டு வந்துவிட முடியும்.
Person's Chopping Onion
ஆனால் இப்போது சூழல் வேறு.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாலரின் மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கும் சூழலில் இந்தியா தொலைதூர நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஏன் இவ்வாறு உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்ந்தது? அதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது பெரும்பாலான வட மாநிலங்களில் மழை வெள்ளத்தின் காரணமாக பயிரிடப்பட்ட வெங்காயம் அனைத்தும் அழிந்து போயின.
Red Onion on Rectangular Basket
தென் மாநிலங்களில் மழை இல்லாததால் விவசாயம் பொய்த்துப் போய் இருக்கிறது.

வட மாநிலத்தில் மழை அதிகம் பெய்து விவசாயம் பொய்த்துப் போனது.

நீர் அதிகமானாலும், குறைந்தாலும் பாதிக்கப்படுவது ஒரு விவசாயி தான் என்பது வேதனையான உண்மை.

Comments

Post a Comment